சென்னை கலைவாணர் அரங்கத்தில் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்த கூடிய வகையில் சிற்பி திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு சிற்பி திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், காவல்துறையை மக்களின் நண்பன் என்று சொல்கிறோம். அதன்படி மக்கள் அனைவரும் காவல்துறையின் நண்பர்களாக இருக்க வேண்டும். காவல்துறையும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றங்கள் குறையும். அதுமட்டுமில்லாமல் குற்றமே நிகழாமலும் தடுக்க முடியும். மக்களையும், காவல்துறையையும் ஒன்றிணைக்கும் எத்தனையோ திட்டங்கள் […]
