மதுரை சிறையில் இருக்கும் மகனுக்கு கஞ்சா கொண்டுவந்த தந்தையும் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் ஆர்.சி.தெருவை சேர்ந்த யாசின் முகமது அலி என்பவர் சென்ற மாதம் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் முகமது அலியை சந்திப்பதற்காக அவரின் தந்தை இப்ராஹிம் மற்றும் நண்பர் ஜெயசூர்யபிரகாஷ் உள்ளிட்டோர் மனு வழங்கி நேற்று காலை பார்க்க வந்தள்ளனர். அப்போது போலீசார் பிரதான சாலையில் சோதனை செய்த பொழுது ஜெயசூர்யபிரகாஷ் […]
