குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி சிறுவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு பண்ணை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 10 வயதான சந்தோஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் அதே பகுதியில் வசிக்கும் ஹரிஷ் என்பவருடன் அடையாறில் இருக்கும் ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]
