சானிடைசர் வைத்து விளையாடிய போது சிறுவர்கள் மேல் தீப்பிடித்து எரிந்து காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்திலுள்ள சாந்தி நகரில் வசிக்கும் சிறுவர்கள் பிரகாஷ் மற்றும் முகுந்தன். இவர்கள் வீட்டின் அருகே சானிடைசரை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சானிடைசரை மரக்கட்டைகளின் மீது ஊற்றி தீ வைத்ததில் திடீரென அச்சிறுவர்கள் மீது தீப்பற்றி எரிந்தது. இதனால் அவர்கள் பதட்டத்தில் அருகிலிருந்த தண்ணீரை எடுத்து தங்கள் மேல் ஊற்றி விட்டனர். இச்சம்பவத்தில் பிரகாஷிற்கு மார்பு பகுதியிலும், […]
