விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுகளத்தூர் பகுதியில் ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் ராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ராஜியின் மூத்த மகனான ராகவன் தனது பாட்டி வீட்டிற்கு பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்தார். அதன்பின் விளையாடிக்கொண்டிருந்த ராகவன் நீண்ட […]
