விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் எல்லமடை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஆகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் ஆகாஷை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் இதுகுறித்து […]
