காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து 1-வது வார்டு பகுதியான பெருமாள்புரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் காலி குடங்களுடன் ஊர் தலைவர் கருப்பசாமி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கணேசன், துணை தலைவர் கல்யாண சுந்தரம் […]
