சிறுவனின் உணவுக்குழாயில் சிக்கியிருந்த நாணயம் அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருகோபனப்பள்ளி யில் வீரபத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக்குமார்(11) என்ற மகன் உள்ளார். கடந்த மாதம் 26-ஆம் தேதி சிறுவன் தவறுதலாக 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டான். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் உடனடியாக அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் நாணயம் சிறுவனின் உணவுக்குழாயில் சிக்கியிருந்தது தெரியவந்தது. இதனால் […]
