பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் சம்பந்தமுடைய சிறுவனுக்கு வயது வந்தோருக்கான மனநிலை திறன் பரிசோதனை நடத்தப்பட்டது. கடந்த மாதம் 15ஆம் தேதி வேலூரில் இருக்கின்ற தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பெண் மருந்துவர் ஒருவர் காட்பாடியில் உள்ள ஒரு தியேட்டருக்கு ஆண் நண்பருடன் இரவில் படம் பார்க்க சென்றுள்ளார். அதன்பின் படம் முடிந்ததும் நள்ளிரவில் அவர்கள் வீடு திரும்புகின்ற போது ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் அந்தப் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். […]
