ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மெக்கானிக்கை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவேடம்பட்டி கிராமத்தில் மெக்கானிக்கான ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியிடம் அவரது பெற்றோர் கேட்ட போது அவர் நடந்தவற்றை தெரிவித்து கதறி அழுதுள்ளார். […]
