தண்ணீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இறவுசேரி கிராமத்தில் தொழிலாளியான சோமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6-ஆம் வகுப்பு படிக்கும் வேம்பரசன் என்ற மகனும், 4-ஆம் வகுப்பு படிக்கும் அபிருதா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் தேன்மொழி தனது அக்கா சுமதியின் வீட்டிற்கு வேம்பரசன், மற்றும் அபிருதாவுடன் சென்றுள்ளார். அங்கு அண்ணன் தங்கை இருவரும் குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அருகில் […]
