தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூர் பகுதியில் கிருஷ்ணன் என்பவரின் மகன் கோபால் (50) வசித்து வருகிறார். பெயிண்டர் தொழில் செய்து வரும் அவர் மனைவி, மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கோபால் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் உறவினர்கள்,வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய கோபாலை அழைத்து பேசி உள்ளனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் இரண்டு பேர் […]
