சென்னையில் 16 வயது சிறுமி காதல் மோகத்தால் கர்ப்பமாகி பின்பு குழந்தையை குளியலறையில் பெற்றெடுத்த சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகே மூன்று இளம் பெண்கள் பச்சிளம் குழந்தையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருப்பதாக கீழ்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு தகவல் கிடைத்தது. அவர் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மிசோரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி வேலை தேடி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியுள்ளார். […]
