சிறுமியை கடத்தி சென்று விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் தொடர்பாக காதலன் உட்பட 8 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் காணாமல் போன நிலையில் அவரது பெற்றோர் காவல் துறையில் புகார் கொடுத்தனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்தபோது அந்த சிறுமி தும்பைப்பட்டி பகுதியை சேர்ந்த சுல்தான் என்பவருடைய மகன் நாகூர் ஹனிபா(29) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. […]
