இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் கணவன் மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி அருகே உள்ள வள்ளுவர் காலனியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வரும் இவருக்கு தமிழ் செல்வி என்ற மனைவியும் அக்ஷயா(7) பிரகதி(3) என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ்ச்செல்வன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாமக்கல் மாவட்டம் களங்காணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நாமக்கல் பாச்சல் மேம்பாலத்தில் இருந்து […]
