ஆப்கானிஸ்தான் கல்வி நிலையத்தில் நடத்தப்பட்ட முறைப்படி தாக்குதலின் 35 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரம் டஷ்-இ-பார்ஷி பகுதியில் கல்வி நிலையம் அமைந்துள்ளது. அந்த கல்வி நிலையத்தில் நேற்று தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் கூடியிருந்தனர். அப்போது அந்தப் பகுதிக்கு உடம்பில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதி ஒருவர் திடீரென வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மாணவிகள் பலர் உடல் சிதறி உயிரிழந்திருக்கின்றனர். இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் […]
