தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் அருகே கோம்பை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் அதிமுக எம்.பியும், பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின் வேலியில் சிக்கி கடந்த 28-ஆம் தேதி 2 வயதுடைய சிறுத்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டுமந்தை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்ற விவசாயியை கடந்த மாதம் 29-ஆம் தேதி வனத்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் கால்நடை வளர்ப்போர் […]
