இந்தியாவில் அழிந்துபோன சிறுத்தைப் புலிகள் இனத்துக்கு புத்துயிரூட்டும் வகையில் நமீபியாவிலிருந்து 8 சிறுத்தைப் புலிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அவற்றை பிரதமர் மோடி மத்தியபிரதேச மாநிலத்தில் காட்டுக்குள் விட்டார். எனினும் இத்திட்டம் வெற்றிகரமாக அமையுமா என விலங்கு பாதுகாவலர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். புது சுற்றுப்புறச் சூழலில் சிறுத்தைப் புலிகள் வேட்டையாடி உட்கொள்ள உணவு, பிற வனவிலங்குகளுக்கு இரையாகாமால் தங்களை அவை காத்துக்கொள்ளும் திறன் மற்றும் இனப்பெருக்க முறை போன்றவற்றில் பெரும் பிரச்சினைகளும், சவால்களும் நிறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இந்தியாவின் […]
