கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலையில் இருக்கின்ற ஆற்றில் ஆழம் பார்க்கச் சென்ற நபர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் ரெட்டியார் பாளையம் என்ற பகுதியில் நடராஜன் என்பவரின் மகன் கௌதம் (41) என்பவர் வசித்து வருகிறார். அவர் தனது நண்பர்கள் ராஜேஷ்குமார், வினோத், பாலாஜி, பாரத், ராகுல், கணேஷ், ஏழுமலை ஆகிய 7 நபர்களுடன் இரண்டு கார்கள் மூலமாக, நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே இருக்கின்ற […]
