சுவிட்சர்லாந்தில், கிளைடரும், சிறிய ரக விமானமும் ஒரே சமயத்தில் விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள Thurgau என்ற மாகாணத்தில் கிளைடர் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அதில் விமானி மட்டும் இருந்துள்ளார். அந்த சமயத்தில் சிறிய ரக விமானமான Robin DR400-ம், Neuchâtel என்ற மாகாணத்திலிருந்து புறப்பட்டு சென்றிருக்கிறது. இந்த விமானத்தில் விமானி, ஒரு பெண், ஆண் மற்றும் ஒரு குழந்தை இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் காலையில் சுமார் 9:30 மணிக்கு […]
