துபாய் பட்டத்து இளவரசர் ஒரு சிறிய பறவைக்காக தனது காரை அன்பளிப்பாக அளித்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பால் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளார். அச்சமயத்தில் அவர் அடிக்கடி பயன்படுத்தும் கருப்பு நிற ‘ மெர்சிடஸ்’ என்ற காரின் முகப்பு பகுதியில் சிறிய பறவை ஒன்று கூடுகட்டி முட்டையிட்டுள்ளது. […]
