குழந்தைகள் பாதுகாப்பிற்கான தமிழக அரசின் செயல் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் பி கீதாஜீவன் தெரிவித்துள்ளார். சமூக நலத்துறை மற்றும் யூனிசெப் சார்பில் புதன்கிழமை சிறார் சட்டங்கள் பற்றி காவல்துறையினருக்கான 2 நாள் பயிற்சி வகுப்பு தொடக்க விழாவில் பங்கேற்று கொண்டு அவர் பேசிய போது, சமூக மேம்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் காப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றது. […]
