வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நெல்லை மற்றும் திருச்செந்தூர் இடையே வருகிற 12-ஆம் தேதி முதல் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில் காலை 11.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு திருச்செந்தூர் சென்று அடையும். அதன்பிறகு மறுமார்க்கத்தில் திருச்செந்தூரிலிருந்து ரயில் (06704) இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.10 மணிக்கு நெல்லை ரயில் நிலையம் சென்றடையும். அதுமட்டுமல்லாமல் இந்த […]
