விழாக்காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் வசூலிக்கப்படும் கூடுதல் தொகையை ரயில் கட்டண உயர்வாக கருதக் கூடாது என இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாட்டில் திருவிழாக் காலங்கள் மற்றும் கோடை விடுமுறை நாட்களில் ஏற்படும் பயணிகள் நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் வழக்கமான ரயில் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ரயில் கட்டண உயர்வு குறித்து செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள இந்திய ரயில்வே நிர்வாகம் இந்த […]
