தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 14,757 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி இன்று முதல் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும். வேலூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லியில் இருந்தும். திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. கோவை மற்றும் தென் […]
