Categories
மாநில செய்திகள்

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப… 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… போக்குவரத்து கழகம் உத்தரவு…!!!!!

ஆங்கில புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற 1.1.2023 அன்று வரை நாகர்கோவில், மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு தினசரி இயங்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் புதுச்சேரி, ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு தினசரி இயக்கக்கூடிய […]

Categories
மாநில செய்திகள்

“ஜாலியோ ஜாலி” நாளை முதல் கிறிஸ்துமஸ் சிறப்பு பேருந்து…. போக்குவரத்துத்துறை அறிவிப்பு…!!!!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளி விடுமுறையை ஒட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இவர்களின் வசதிக்காக ஆண்டுதோறும் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தெற்கு ரயில்வே சார்பாக ரயில்களும் இயக்கப்பட்டு வருகினறது. அந்த வகையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, பொதுமக்கள் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால், நாளை முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை… “600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்”…. போக்குவரத்து கழகம் வெளியிட்ட. தகவல்..!!!!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதாலும், அடுத்து புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறைகள் இருப்பதாலும் பலரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் முன் பதிவுகள் நிரம்பியுள்ளது. இந்நிலையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: விடுமுறை, சிறப்பு பேருந்து அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் டிச. 6ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபத்திருவிழாவில் […]

Categories
தேசிய செய்திகள்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு சிறப்பு பேருந்து…. எங்கு தெரியுமா…? வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கேரளாவிற்கு சிறப்பு சேவையை கர்நாடக அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. டிசம்பர் 21ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை சென்னை, கோவை, ஓசூர், கிருஷ்ணகிரி, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய இடங்களுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகள் ஒன்றாக டிக்கெட் முன்பதிவு செய்தால், டிக்கெட் விலையில் 5 சதவீத தள்ளுபடியும், இருவழி டிக்கெட்டுகளை ஒன்றாக […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலைக்கு 3,000 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்… போக்குவரத்து கழகத்தின் தீவிர ஏற்பாடு…!!!!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருநாள் ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இதனை பார்ப்பதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகின்றனர். ஆனால் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று காரணமாக கார்த்திகை தீப விழா  நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த வருடம் டிசம்பர் 6-ம் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து 7-ம் தேதி பௌர்ணமி ஆகும். 2 சிறப்பு தினங்களும் அடுத்தடுத்து வருவதால் திருவண்ணாமலைக்கு செல்வதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள்  திட்டமிட்டுள்ளனர். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து…. தமிழக முதல்வருக்கு பறந்த கோரிக்கை….!!!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மையம் சார்பாக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மையம் சார்பாக மாணவர் அணி மாநில செயலாளர் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அரசு பள்ளி மாணவர்கள் பொது போக்குவரத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். மாணவர்கள் பாடங்களை சரியாக படிப்பதற்கு எந்த விதமான உளைச்சலும் இல்லாமல் இருக்க வேண்டும் ஆனால் குறித்த […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு பேருந்து மூலமாக தமிழக அரசுக்கு கிடைத்த வருவாய்…? போக்குவரத்து துறை வெளியிட்ட தகவல்..!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு இயக்கப்பட்ட தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலமாக 9.5 கோடி வருவாய் ஈட்டப்பட்டு இருப்பதாக தமிழக போக்குவரத்து துறை கூறியுள்ளது. இது பற்றி தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தீபாவளிக்காக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலமாக தமிழக அரசுக்கு சுமார் 9.5 கோடி வருவாய் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(21.11.22) முதல் சிறப்பு பேருந்துகள்…. எந்தெந்த இடங்களில்….? இதோ லிஸ்ட்….!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து முக்கிய நகருக்கு செல்லும் ரயில்களில் புக்கிங் நிரம்பிவிட்டன. ஆம்னி பேருந்துகளில் விலை மும்மடங்காக உள்ளதால், மக்கள் அரசு பேருந்துகளை புக் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று 2,100 பேருந்துகள் வெளியூர் செல்ல இயக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், பயணிகளின் நிலையை புரிந்துகொண்டு 250 பேருந்துகள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட உள்ளது. இன்று 21ஆம் தேதி வழக்கம்போல் இயக்கப்படும் 2100 சிறப்பு பேருந்துகளுடன் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுவாகவே தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது வெளியூரில் இருக்கும் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.அதனால் அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதும்.இதனால் மக்களின் வசதிக்காக தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தீபாவளிக்கு 16,688 சிறப்பு பேருந்துகள் – தமிழக அரசு அறிவிப்பு …!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையானது 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இந்நிலையில் தமிழகத்தில் 21,22,23ஆகிய மூன்று நாட்களுக்கு தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கம் தொடர்பான ஒரு ஆலோசனைக் கூட்டம் என்பது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் […]

Categories
மாநில செய்திகள்

சொந்த ஊர் சென்றவர்களுக்கு…. சென்னைக்கு திரும்புவதற்கு சிறப்பு பேருந்துகள்….. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் சரஸ்வதி, ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு அடுத்தடுத்து அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சொந்த ஊருக்கு செல்ல விரும்பு பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் செப்டம்பர் 30, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து பல்வேறு ஊருக்கு தினசரி […]

Categories
மாநில செய்திகள்

ஆயுதபூஜையை முன்னிட்டு….. சிறப்பு பேருந்துகள் குறித்த விவரம்….. உள்ளே இதோ….!!!!

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜையை முன்னிட்டு,சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில், வரும் செம்ப்டம்பர் 30ம் தேதி முதல் அக்டோப்டர் வரை இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு: தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, செல்லும் பேருந்துகள், சேத்துபட்டு, வந்தவாசி, எஞ்சி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மக்களே சிரமமில்லை…! செப் 11ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்று. தமிழகத்தில் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் இந்த பேராலயத்துக்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனர். அன்னை மரியாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8ம் தேதி அன்று ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி….. இந்த நாட்களில்…..  மாமல்லபுரத்திற்கு கூடுதல் பேருந்துகள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாமல்லபுரத்துக்கு வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகின்றது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த போட்டியை பார்ப்பதற்கு பொதுமக்கள் டிக்கெட் பெற்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியை காண பொதுமக்கள் செல்ல வசதியாக மாமல்லபுரத்திற்கு கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றது. அதன்படி திருவான்மியூர், தாம்பரம் பஸ் நிலையங்களில் இருந்து அதிகளவு […]

Categories
மாநில செய்திகள்

ஆடி அமாவாசை விழா…. “சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்”….. சூப்பர் அறிவிப்பு….!!!!

ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம், ஆடி அமாவாசை திருநாள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு வரும் 28ஆம் தேதி ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளது. இதையடுத்து பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை திருவிழாவுக்கு வருகிற 26-ம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்….. போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு…..!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை நிரப்புவதற்கு இன்று குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 9,35,344 பேரும், பெண்கள் 12, 67,457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக மக்களே…. வரும் 15ஆம் தேதி முதல் திருப்பதி செல்ல பேருந்து…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பக்தர்களின் வசதிக்காக சென்னையிலிருந்து தினம்தோறும் திருப்பதிக்கு பேருந்து போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வருகின்ற 15ஆம் தேதி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரிசனம் செய்ய விருப்பமுள்ள பக்தர்கள் தமிழ்நாடு டூரிசம் என்ற ஆன்லைன் முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 300 ரூபாய் ஆன்லைன் தரிசன டிக்கெட் உடன் […]

Categories
தேசிய செய்திகள்

“ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்”….. சென்னை டூ திருப்பதி ஸ்பெஷல் பேருந்துகள்…..!!!!

திருப்பதிக்கு தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் அரசு பேருந்து அல்லது தனியார் பேருந்துகள் மூலமாக தற்போது திருப்பதிக்கு சென்று வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் காளஹஸ்திக்கு சென்று தரிசனம் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2, 2A தேர்வர்களுக்கு சூப்பர் நியூஸ்…. சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக காரணமாக அரசு தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இதனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை பூர்த்தி செய்யும் விதமாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2A தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் முதல் கட்டமாக மார்ச் மாதம் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து இந்த தேர்வு நாளை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுவதால் தேர்வாணையம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ஏற்காடு கோடை விழா: மே-26 முதல் சிறப்பு பேருந்து இயக்கம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை ஏராளமான மக்கள் கண்டுகளித்து செல்வார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் கோடை விழா நடத்தலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், ஏற்காடில் 45வது கோடைவிழா வரும் 26ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்களே….! 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. திருவண்ணாமலை கிரிவலத்தில் சிறப்பு ஏற்பாடு….!!!

திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலத்தில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் கிரிவலம் நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிரிவலம் வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கோவில் மற்றும் கிரிவலப் பாதையை […]

Categories
மாநில செய்திகள்

செம அறிவிப்பு…! நாளை முதல் 19-ஆம் தேதி வரை…. இந்த மாவட்டத்திற்கு சிறப்பு பேருந்துகள்….!!!!

மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா கொண்டாடப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மதுரை மாவட்ட பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளுக்கு நாளை முதல் 19ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை, விருதுநகர் மற்றும் திருமங்கலம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழா… “ஈரோட்டிலிருந்து பண்ணாரி, பழனிக்கு சிறப்பு பேருந்துகள்”… கலெக்டர் அறிவிப்பு…!!

ஈரோட்டிலிருந்து பண்ணாரி, பழனிக்கு சிறப்பு பேருந்துகள் கோவில் திருவிழாவை முன்னிட்டு இயக்கப்பட உள்ளது என்று கலெக்டர் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு பண்ணாரி, பழனிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று  மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணிஅறிக்கை வெளிட்டுள்ளார். அதில், பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் மறுபூஜை திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டலம் சார்பாக சிறப்பு பேருந்துகள் பொதுமக்கள் வசதிக்காக வருகின்ற 21 ஆம் தேதி, 22ஆம் தேதி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்துக் கழகத்திற்கு….. பொங்கலோ பொங்கல்…..!!!!!

தமிழர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல். இது தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் மக்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் கொண்டாட செல்வது வழக்கம். அதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்தமுறையும் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோன்று கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களிலிருந்தும் பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கியது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து…. ஆப்பு வைத்த போக்குவரத்துத்துறை….!!!!

தமிழர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல். இது தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் மக்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் கொண்டாட செல்வது வழக்கம். அதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்தமுறையும் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோன்று கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களிலிருந்தும் பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கியது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொங்கலுக்கு பிறகு…. போக்குவரத்து துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இன்று முதல் 13 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தீவிரமடைவதால் தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஜனவரி 16 […]

Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு 10,000 சிறப்பு பேருந்துகள்….!! அதோடு பயணிகளுக்கு அலர்ட் கொடுத்துள்ள தமிழக அரசு…!!

ஜனவரி 17 முதல் 19 ஆம் தேதி வரை 10000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, பொங்கல் சிறப்பு பேருந்துகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பின்பு ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை இயக்குவதாக இருந்த சிறப்புப் பேருந்துகள் ஜனவரி 17 முதல் 19ஆம் வரை இயக்கப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொங்கல் சிறப்பு பேருந்துகள்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசியிருப்பதாவது, தமிழகத்தில் தீபாவளி பண்டிகை போன்றே பொங்கல் பண்டிகையையொட்டி பொது மக்களின் போக்குவரத்து வசதிக்காக சுமார் 17,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் ஆம்னி பேருந்துகளில் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரின் உத்தரவின் பெயரில், இதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேலும் மக்களின் சிரமம் கருதி, இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் சிறப்பு பேருந்து குறித்து அறிய…. இந்த எண்ணுக்கு அழைக்கலாம்…. முக்கிய அறிவிப்பு…!!!!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பான ஆலோசனையை போக்குவரத்து துறை அமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பொங்கல் சிறப்பு பேருந்து…. தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பான ஆலோசனையை போக்குவரத்து துறை அமைச்சர் சற்று நேரத்திற்கு முன்பு மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள்….. அமைச்சர் இன்று முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் செயலாளர் அதிகாரிகளுடன் பொங்கல் சிறப்பு பேருந்து முன்னேற்பாடுகள் குறித்து இன்று போக்குவரத்த துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனை மேற்கொள்கிறார். வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கக்கூடிய நிலையில் சென்னையில் இருந்து பல்வேறு சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்களின் வசதிக்காக தமிழக […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு வசதியாக சிறப்பு பேருந்து….. தமிழக அரசு அதிரடி…!!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு சரியான பேருந்து வசதி இல்லாததால் பேருந்துகளில் கூட்டநெரிசலில் இடமில்லாமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் பள்ளி மாணவிகளுக்கு மட்டும் தனியாக இரண்டு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி பள்ளி வளாகத்தில் இருந்து நாகர்கோவில் பேருந்து நிலையத்திற்கு காலை மாலை என்று இரண்டு வேளைகளில் இரண்டு பேருந்துகள் இயக்க அரசு பேருந்துகள் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்…..  அதுக்குள்ள இவ்வளவு முன்பதிவா…?  பயணிகள் மும்முரம்…..!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வரை 17 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்படும். இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு அதிக அளவில் சென்று வருவார்கள். இதன் காரணமாகவே சென்னையில் இருந்து தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் அதிக அளவில் பேருந்துகள் விடுவது வழக்கம். இதுபோன்ற காலங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் ரயில் […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு…. நாளை முதல் சிறப்பு பேருந்துகள்…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…. 14¹/² லட்சம் பயணிகள் பயணம்…. அமைச்சர் தகவல்….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட பேருந்துகளில் 14,00,000 பயணிகள் பயணம் செய்துள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். இதுபற்றி போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பேசியதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சிரமம் இல்லாமல் சொந்த ஊர்களுக்குச் செல்லும் அங்கிருந்து மீண்டும் திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு முதல்வர் ஆணையிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் கடந்த 7 நாட்களில் 28,844 பேருந்துகள் இயக்கப்பட்டதன் மூலமாக14, 24,649 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. சிறப்பு பேருந்துகளில் 7 ஆயிரம் பேர் முன்பதிவு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. டபிள்யூ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து வருகிறார்கள். இதையடுத்து தமிழகம் முழுவதும் 832 அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை 7,000 பேர் தீபாவளி பண்டிகைக்காக முன்பதிவு செய்திருப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறியுள்ளார். அரசின் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்…. புகார் அளிக்க இலவச எண்கள் அறிவிப்பு…. அமைச்சர் அதிரடி….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடும் வண்ணம் சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து 16, ஆயிரத்து 540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆயுதபூஜைக்கு செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக வருடம்ந்தோறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த வருடமும் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே தயாரா?…. 500 சிறப்பு பேருந்துகள்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது.  இந்நிலையில் மக்கள் வாக்களிக்க செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போக்குவரத்து கழகம் 250 பேருந்துகளை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செஞ்சி, திருக்கோவிலூர், ஆரணி மற்றும் வந்தவாசி ஆகிய பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி கூறியது, உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்காக […]

Categories
மாநில செய்திகள்

தேர்தலை முன்னிட்டு…. சிறப்பு அரசு பேருந்துகளில்…. 2.63 லட்சம் பேர் பயணம்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் மக்களும் வாக்களிக்க தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வாக்களிக்க செல்வோருக்கு ஐந்து இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாதவரம், கே.கே நகர், சானிடோரியம், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாளை ஞாயிறு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இருப்பவர்களே! சொந்த ஊருக்கு கிளம்புங்க…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் மக்களும் வாக்களிக்க தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வாக்களிக்க செல்வோருக்கு ஐந்து இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாதவரம், கே.கே நகர், சானிடோரியம், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாளை ஞாயிறு விடுமுறை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வாக்காளர்களின் சிரமத்தை குறைக்க… கூடுதல் சிறப்பு வசதிகள்… மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தகவல்..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் சொந்த ஊர் சென்று வாக்களிப்பதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை உரிய வாக்குச்சாவடியில் பதிவு செய்ய ஏதுவாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி திருச்சி, கரூர், பெரம்பலூர், செந்துறை, புதுக்கோட்டை ஜெயங்கொண்டம், அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் வருகின்ற 4, 5-ம் தேதிகளில் கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

வெளியூர் காரர்களே..! சென்னையிலிருந்து கிளம்புங்க…. உங்களுக்கு செம அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது. மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிற ஊர்களில் இருந்து வர ஏதுவாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

சிறப்பு பேருந்திற்கான முன்பதிவிற்கு…. இதை செய்யுங்கள்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது. மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிற ஊர்களில் இருந்து வர ஏதுவாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…. விடிய விடிய பேருந்து ஓடும்… எம்டிசி அறிவிப்பு…!!

பொங்கல் பண்டிகையையொட்டி 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று எம்டிசி  நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பும் பயணிகளுக்காக சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதன்படி கோயம்பேடு, கேகே நக,ர் தாம்பரம், சானடோரியம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து இன்று முதல் நாளை மறுதினம் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மாநகரின் பல்வேறு பகுதியில் வசிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்…. சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் வெளியூர்களில் இருந்து மக்கள் பொங்கல் பண்டிகைக்காக தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவது வழக்கம். இதனால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு, தாம்பரம், கே.கே நகர், மாதவரம், பூவிருந்தவல்லி ஆகிய ஐந்து பேருந்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது. சென்னையிலிருந்து 270 சிறப்பு பேருந்துகள் உட்பட 2226 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… தமிழகத்தில் இன்று முதல்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் பொதுமக்களின் வசதிக்காக அதிக அளவு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு மிக எளிமையாக சென்று திரும்ப முடியும். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் பொதுமக்களின் வசதிக்காக அதிக அளவு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு மிக எளிமையாக சென்று திரும்ப முடியும். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ கலந்தாய்வு… சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!!

மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகின்ற நேரு விளையாட்டு அரங்கத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கு கலந்தாய்வுக் கூட்டம் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. அதனால் வெளியூர் மாணவர்களின் வசதிக்காக மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகின்ற நேரு விளையாட்டு அரங்கத்தில் சிறப்பு இயக்கப்படும் என்று மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறியுள்ளார். மேலும் கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்டம் குறைந்தது …!!

தீபாவளியை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் இருந்து இரண்டாவது நாளாக இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெளியூர்களுக்கு செல்ல அதிகளவில் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் இல்லாததால் சிரமமின்றி பயணம் செய்ய முடிவதாக பேருந்து பயணிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |