கலவரம் என்பது வாழ்வின் ஒரு பகுதி என்று ஹரியானா மாநில அமைச்சர் ரஞ்சித் சவுதாலா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டதில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் கடந்த 3 நாட்களில் தலைமைக் காவலர் ரத்தன் லால், உளவுப் பிரிவு பணியாளர் அன்கித் சர்மா உள்பட 38 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 200-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தலைநகர் டெல்லியில் ஏற்றப்பட்ட இந்த […]
