சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அரசுத்துறை செயலாளர்கள் உடன் முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். முதல் நாளான இன்று 19 துறை செயலாளர்கள் உடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். திட்டங்களின் துறை செயலாளர்கள் உடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் “ஏழை-எளிய மக்களுக்கு நலம் பயக்கும் வகையில் எவ்வித தொய்வும் தாமதமும் இல்லாமல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பேருந்து நிலைய திட்டங்கள், குடிநீர், சாலை திட்டங்களை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும். […]
