தமிழகத்தில் குரங்கம்மை வைரஸ் தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் உள்ள பணியாளர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து […]
