திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பெரும்பாலான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். இந்நிலையில் இந்த கோவிலில் அக்டோபர் மாதத்துக்கான ரூபாய்.300 சிறப்பு கட்டண தரிசனம் டிக்கெட்டானது சென்ற 18ம் தேதி காலை 9 மணியளவில் வெளியிடப்பட்டது. நாளொன்றுக்கு 25 ஆயிரம் டிக்கெட் வீதம் 24 தினங்களுக்கு 6 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. இவற்றில் வெளியிட்ட 72 மணி நேரத்திற்குள்ளாக மொத்த டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டது. இதன் வாயிலாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு 18 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து இருக்கிறது. செப்டம்பர் […]
