தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று தனது 81 வது பிறந்த நாளை கொண்டாடினார். விஜயின் தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் திரைத்துறையினர் என பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதன் பிறகு தனது மனைவி ஷோபா உடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வருகின்றனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவில்லை. […]
