Categories
மாநில செய்திகள்

இல்லம் தேடி கல்வி திட்டம்…. அதிகாரிகளுக்கு புதிய பணி நியமனம்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் கற்றலில் குறைபாடு போக்குவதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இதில் முதல் கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி போன்ற 12 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்பட உள்ளது. இதற்காக அரசு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இல்லம் தேடி கல்வி பணியில் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடம்… 3 மாதங்களில் கட்டி முடிக்க அரசு முடிவு… சிறப்பு அதிகாரிக்கு உத்தரவு…!!!

சென்னை மெரினா கடற்கரையின் அருகே கட்டிக் கொண்டிருக்கும் ஜெயலலிதா நினைவிட பராமரிப்பு பணிக்காக சிறப்பு அதிகாரி ஒருவரை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் வளாகத்தின் அருகே அடக்கம் செய்யப்பட்டது. அங்கு தற்போது ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் ஒன்றை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து ரூபாய் 50.80 கோடி நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே 8ஆம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது: சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,461 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் குடிசை பகுதிகளை கண்டறிந்து நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது, சென்னை மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இன்று மாலை ஆலோசனை!

சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் சண்முகம் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது . தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனையடுத்து சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 1ம் தேதி சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல சென்னை கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு!

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள 4 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி, ஒரு காவல் அதிகாரி கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு அதிகமாக உள்ள மண்டலங்களில் கூடுதலாக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் மக்களுக்கு சத்தான உணவுகளை வழங்க திட்டம்: ராதாகிருஷ்ணன்!!

சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க பகுதி வாரியாக திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” சென்னை ராயபுரம் பகுதியில் கொரோனா பாதிப்பை குறைக்க தனித்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் நோய் பாதிப்பு அதிகம் உள்ள 10 பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். கோயம்பேடு தொடர்பாக கோடம்பாக்கம் மண்டலத்தில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கோடம்பாக்கம் மற்றும் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0.9%…. தேவையற்ற அச்சம் வேண்டாம்: ராதாகிருஷ்ணன் பேட்டி..!

கொரோனா பாதிப்பு குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இன்று செய்தியார்களை சந்தித்த அவர், ” சென்னையில் கொரோனா தடுப்புக்கான களப்பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார். வயதான, ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க நிபுணர்களுடன் ஆலோசிக்கிறோம் என அவர் கூறியுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேவையான மருந்துப்பொருட்களை வழங்கி வருகிறோம். மேலும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விகிதம் குறைவு என அவர் தெரிவித்துள்ளார். […]

Categories

Tech |