திசம்பர் 1 கிரிகோரியன் ஆண்டின் 335 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 336 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 30 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 800 – வத்திக்கானில் பிராங்கியப் பேரரசர் சார்லமேன் திருத்தந்தை மூன்றாம் லியோ மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்தார். 1420 – இங்கிலாந்தின் ஐந்தாம் என்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான். 1768 – அடிமைகளை ஏற்றிச் செல்லும் பிரெடென்போர்க் என்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது. 1822 – முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசராக முடிசூடினார். 1828 – அர்கெந்தீனாவில் இராணுவத் தளபதி யுவான் லாவால் ஆளுநர் மனுவேல் டொரெகோவுக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி, திசம்பர் புரட்சியை ஆரம்பித்தான். 1834 – தென்னாப்பிரிக்காவின் கேப் குடியேற்றத்தில் அடிமைத் தொழில் ஒழிக்கப்பட்டது. 1875 – வேல்சு இளவரசர் (பின்னாளைய ஏழாம் […]
