சனவரி 21 கிரிகோரியன் ஆண்டின் 21 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 344 (நெட்டாண்டுகளில் 345) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 763 – கூஃபா என்ற இடத்தில் அலீதுகளுக்கும் அபாசியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் அபாசியர்கள் வென்றனர். 1643 – ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார். 1720 – சுவீடனும் புருசியாவும் ஸ்டாக்ஹோம் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தி போரை நிறுத்திக் கொண்டன. 1749 – இத்தாலி, வெரோனா நகரில் பிலர்மோனிக்கோ அரங்கு தீக்கிரையானது. இது மீண்டும் 1754-இல் மீளக் கட்டப்பட்டது. 1774 – முதலாம் அப்துல் அமீது உதுமானியப் பேரரசராகவும் இசுலாமின் கலிபாவாகவும் நியமிக்கப்பட்டார். 1793 – பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக கில்லட்டின் மூலம் […]
வரலாற்றில் இன்று ஜனவரி 21…!!
