மார்ச் 12 கிரிகோரியன் ஆண்டின் 71 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 72 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 294 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1622 – இயேசு சபை நிறுவனர்கள் லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார் ஆகியோருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர்களாக அறிவித்தது. 1870 – இலங்கையில் இருந்து முதல் தடவையாக ஐரோப்பாவிற்கு கோப்பி ஏற்றுமதி சூயசு கால்வாய் வழியே மேற்கொள்ளப்பட்டது.[1] 1879 – நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலப் படைகள் சூலுக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 1894 – முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. 1913 – ஆத்திரேலியாவின் வருங்கால தலைநகர் அதிகாரபூர்வமாக கான்பரா எனப் பெயரிடப்பட்டது. கான்பரா அமைக்கப்படும் வரையில் 1927 வரையில் மெல்பேர்ண் தற்காலிகத் தலைநகராக இருந்தது. 1918 – 215 ஆண்டுகளாக உருசியாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது. […]
வரலாற்றில் இன்று மார்ச் 12…!!
