ஆகத்து 11 கிரிகோரியன் ஆண்டின் 223 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 224 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 142 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 3114 – பல முன்-கொலம்பிய இடையமெரிக்கப் பண்பாடுகள், குறிப்பாக மாயா நாகரிகம் ஆகியன பயன்படுத்திய இடையமெரிக்க நீண்ட கணக்கீட்டு நாள்காட்டி ஆரம்பம். கிமு 2492 – ஆர்மீனியா நிறுவப்பட்டது. 355 – நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட குளோடியசு சில்வானசு உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவித்தான். 1786 – மலேசியாவில் பினாங்கில் கப்டன் பிரான்சிஸ் லையிட் பிரித்தானியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார். 1804 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரான்சிசு ஆஸ்திரியாவின் முதலாவது மன்னராக முடி சூடினார். 1812 – இலங்கையில் பேராதனை தாவரவியற் பூங்கா அமைக்கப்பட்டது.[1] 1898 – எசுப்பானிய அமெரிக்கப் […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 11…!!
