நவம்பர் 12 கிரிகோரியன் ஆண்டின் 316 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 317 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 49 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 764 – திபெத்தியப் படைகள் சீனாவின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்பற்றி வைத்திருந்தன. 1028 – பின்னாளைய பைசாந்தியப் பேரரசி சோயி பேரரசர் மூன்றாம் ரொமானொசின் மனைவியாக முடிசூடினார். 1555 – திருத்தந்தைகளுக்கு எதிராக 1529 முதல் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு கத்தோலிக்க திருச்சபையை இங்கிலாந்தில் மீண்டும் கொண்டுவரும் சட்டத்தை மகாராணி முதலாம் மேரி கொண்டு வந்தார். 1793 – பாரிசு நகரின் முதலாவது முதல்வர் சான் பெய்லி கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். 1893 – […]
