சனவரி 24 கிரிகோரியன் ஆண்டின் 24 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 341 (நெட்டாண்டுகளில் 342) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 41 – உரோமைப் பேரரசர் காலிகுலா அவரது பிரெட்டோரியக் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். காலிகுலாவின் மாமா குளோடியசு பேரரசராக அறிவிக்கப்பட்டார். 914 – எகிப்து மீதான பாத்திமக் கலீபகத்தின் முதலாவது முற்றுகை ஆரம்பமானது.[1] 1458 – மத்தாயசு கொர்வீனசு அங்கேரியின் அரசராக முடிசூடினார். 1624 – எத்தியோப்பியாவின் திருமடத்தலைவராக திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரியால் நியமிக்கப்பட்ட அபொன்சோ மென்டெசு கோவாவில் இருந்து மசாவா நகரை வந்தடைந்தார். 1679 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு நாடாளுமன்றத்தைக் கலைத்தார். 1739 – மராட்டிய தளபதி சிம்னாஜி அப்பா போர்த்துக்கீசப் படைகளைத் தோற்கடித்து, தாராப்பூர் கோட்டையைக் கைப்பற்றினார். 1742 – ஏழாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். 1835 – பிரேசிலின் சவ்வாதோர், பாகையா நகரில் […]
வரலாற்றில் இன்று ஜனவரி 24…!!
