மார்ச் 18 கிரிகோரியன் ஆண்டின் 77 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 78 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 288 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 37 – உரோமை மேலவை திபேரியசின் உயிலை ஏற்க மறுத்து, காலிகுலாவை பேரரசராக அறிவித்தது. 633 – காலிபா அபூபக்கரின் தலைமையில் அராபியத் தீபகற்பம் ஒன்றுபட்டது. 1068 – லெவண்ட்ம் அராபியத் தீபகற்பம் ஆகியவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20,000 பேர் வரை இறந்தனர். 1229 – 6-வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் தன்னை எருசலேமின் மன்னராக அறிவித்தார். 1241 – போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் முற்றுகையிடப்பட்டு சேதமாக்கப்பட்டது. 1314 – தேவாலய புனித வீரர்களின் 23-வதும், கடைசியுமான வீரர் யாக் டி மோலே மரத்தில் கட்டப்பட்டு எரியூட்டிக் கொல்லப்பட்டார். 1438 – […]
வரலாற்றில் இன்று மார்ச் 18…!!
