மே 8 கிரிகோரியன் ஆண்டின் 128 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 129 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 237 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1450 – இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் என்றி மன்னருக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது. 1794 – பிரான்சிய வேதியியலாளர் அந்துவான் இலவாசியே பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சியில் தேசத்துரோகக் குற்றங்களுக்காக பாரிசில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டார். 1821 – கிரேக்க விடுதலைப் போர்: கிரேக்கர்கள் துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர். 1842 – பாரிசு நகரில் தொடருந்து ஒன்று தடம் புரண்டு தீப்பிடித்ததில் 200 பேர் […]
வரலாற்றில் இன்று மே 8…!!
