அக்டோபர் 11 கிரிகோரியன் ஆண்டின் 284 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 285 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 81 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1138 – சிரியா, அலெப்போ நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 1142 – சீனாவில் சின் வம்சத்திற்கும், சொங் வம்சத்திற்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது. 1531 – சுவிட்சர்லாந்தில் உரோமைக் கத்தோலிக்கப் பிரிவுகளுடன் ஏற்பட்ட போரில் உல்ரிக் சிவிங்கிலி கொல்லப்பட்டார். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1634 – டென்மார்க் மற்றும் செருமனியில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 15,000 பேர் உயிரிழந்தனர். 1649 – 10-நாள் முற்றுகையின் பின்னர், ஆலிவர் கிராம்வெல்லின் ஆங்கிலேயப் படைகள் […]
