சர்வதேச பயணம் மற்றும் குடியேற்றத்துக்கான மிகவும் பயனுள்ள இ-பாஸ்போர்ட் முறையை நோக்கி இந்தியா நகர்கிறது. இதற்கான அறிவிப்பை வெளியுறவு அமைச்சகமானது நேற்று வெளியிட்டது. புதிய அம்சங்கள் தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் சஞ்சய் பட்டாச்சார்யா ட்வீட் செய்துள்ளார். இ- பாஸ்போர்ட்டின் மையத்தில் உரிமையாளரின் பயோமெட்ரிக் தரவு அடங்கிய மைக்ரோசிப் இருக்கிறது. இது விமானப் போக்குவரத்து குறித்த சர்வதேச அமைப்பான சிவில் ஏவியேஷன் ஆர்கனைசேஷன் (ICAO) தரநிலைகளுக்கு ஏற்ப இருக்கும். நாசிக்கில் உள்ள இந்தியா செக்யூரிட்டி பிரஸ்ஸில் பாஸ்போர்ட் தயாரிக்கப்படும் […]
