சென்னை நந்தத்தை சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி என்பவர் சிபிசிஐடி பிரிவில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், சிபிஐ பதிவு செய்யும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள் பதிவேற்றம் செய்யப்படும் நிலையில், சிபிசிஐடி பிரிவின் முதல் தகவல் அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவது இல்லை. இதனால் வழக்கு விவரங்களை சம்பந்தப்பட்டவர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. எனவே சிபிசிஐடி பிரிவை இணையதளத்தில் சேர்த்து […]
