நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்தது. ஜெயலலிதா மறைந்து சில காலங்களிலேயே அவருக்கு சொந்தமான எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த எஸ்டேட்டில் பணியாற்றிய காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டதுடன், சில முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப் பட்டது. இந்த சம்பவத்தில் […]
