மின் கட்டண உயர்வு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்த நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களின் அறிக்கை எதிரிகளின் வாய்க்கு அவலாகி விடக்கூடாது என்று திமுகவின் முரசொலி நாளிதழ் அறிவுறுத்தி இருக்கிறது. சிலந்தி என்ற பெயரில் முரசொலி நாளிதழில் எழுதப்பட்டிருக்கக் கூடிய கட்டுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரள மாநிலத்தில் கூட அண்மையில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. வேறு வழியற்ற நிலையில்தான் கேரளா அரசு, மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கும் […]
