கோவையைச் சேர்ந்த 17 வயதான மாணவி அங்குள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அங்கு இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்கரவர்த்தி அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அப்பள்ளியில் தொடர்ந்து படிக்க விரும்பாத அவர் வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்துள்ளார். இருப்பினும் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 11ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். […]
