சின்னச் சுருளி அருவியில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்வதற்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றார்கள். தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் அருகே சுருளிஅருவி இருக்கின்றது. இந்த அறிவிக்குச் செல்ல சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புவார்கள். ஆனால் இங்கே சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு குறைவாகவே இருக்கின்றது. எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. அருவிக்கு செல்வதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே வாகனங்கள் நிறுத்தப்படும். அருவியில் குளிப்பதற்கு பாதுகாப்பான சூழல் இல்லை. […]
