தென் மாவட்டங்களில் புரட்சித் தாய் சின்னம்மா சுற்றுப்பயணம் மேற்கொண்ட சூழலில் டுவிட்டரில் சின்னம்மா என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 59வது குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ புரட்சித் தாய் சின்னம்மா மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதேபோல் மதுரையில் உள்ள மருது சகோதரர்கள் சிலைகளுக்கும் புரட்சி தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். […]
