குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றபோது கூலித்தொழிலாளி வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள மார்க்கையன்கோட்டை கிராமத்தில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரெஜினா திருமணம் முடிந்து வந்தவாசியில் வசித்து வரும் நிலையில் தற்போது கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளைச்சாமி தனது குடும்பத்தினருடன் திருவிழாவை காண்பதற்கு வீட்டை பூட்டி சாவியை ஜன்னலில் வைத்துவிட்டு கோவிலுக்கு சென்றார். இதனை […]
