பிரபல தொலைக்காட்சியின் துணை நடிகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் “தேன்மொழி பி.ஏ ஊராட்சி மன்ற தலைவி” சீரியலில் தொகுப்பாளினி ஜாக்லின் நடிகையாக நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சித்தார்த் நடித்துள்ளார். மேலும் துணை நடிகராக செல்வரத்தினம்(45) என்பவர் நடித்து வந்துள்ளார். இவர் எம்ஜிஆர் நகரில் உள்ள வள்ளல் பாரி தெருவில் வசித்து வந்துள்ளார். இலங்கை தமிழரான இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். […]
